Preface​

Manikandan Chokalingam Chettiar ​

Gloabally nagarathar are constantly seeking spirituality and peace amidst the chaos of urban life, the importance of traditions and festivals in the village of Paganeri, an array of festivals such as Pattablan Dharmamkathan Pandivinayakar Chaturthi, Bharata Vinayakar Kavadi, and Pulvanayaki Amman Aani therottam are celebrated. These festivals not only serve as a time for celebration but also as a source of spiritual nourishment for the village residents.

However, amidst the hustle and bustle of city life, it is crucial to find moments of peace and tranquillity. It is with this intention that the Buddha Temple named “Manomaya Buddha” was established at my house complex in Paganeri, Tamilnadu. This Buddha Peedam is dedicated to the theme of peace and serves as a sanctuary for individuals seeking inner peace and enlightenment. The opening of the Buddha Peedam’s eyes on February 11, 2023, marked a significant milestone in the journey towards peace and tranquillity.

As the Buddha once said, “We are formed by our thoughts. We become what we think. Only when our thoughts are pure happiness follow us like a shadow.” These words serve as a guiding light for those who visit the Buddha temple, reminding them of the importance of cultivating pure thoughts and finding joy in the present moment. The Buddha temple not only provides a space for meditation and reflection but also serves as a reminder of the power of inner peace in our daily lives.

In a world filled with distractions and noise, it is essential to find moments of stillness and serenity. The Buddha Temple offers a sanctuary where individuals can quiet their minds, concentrate on their inner thoughts, and find the peace they have been searching for. Through meditation and mindfulness practices, visitors to the Buddha Temple can cultivate a sense of contentment and joy that transcends the chaos of the city.

Manikandan Chokalingam Chettiar

"Our mission is to help the elderly achieve peace through our meditation center, to provide devotees with spiritual knowledge through our library, to teach children wisdom through our education institute, and to improve physical wellness for youth through our indoor and outdoor playgrounds. We invite you to visit the Buddha Temple, participate in our various programs, and experience the peace and fulfilment that come from nurturing all aspects of life." ​

The Buddha Temple is a beacon of peace and tranquillity in the midst of a bustling city, reminding us of the value of inner calm and mindfulness.

என்னுரை

மணிகண்டன் சொக்கலிங்கம் செட்டியார்

உலகம் முழுவதும் நகரத்தார்கள் ஆன்மீகம், கல்வி போன்றவற்றில் தங்களின் மேலான பங்களிப்பை நல்கி வருகின்றார்கள். நம்மூர் பாகனேரியில் ஆண்டாண்டு காலமாக பட்டப்பிளான் தர்மம்காத்தான் பாண்டிவிநாயகர் சதுர்த்தி, பாரத விநாயகர் காவடி எடுப்பு, புல்வநாயகி அம்மன் ஆனித்தேரோட்டம், அக்னி ஆத்தாள் வழிபாடு, சிவன் கோவில் சோமவார வழிபாடு, ஆடி மாத முருகன் பூஜை, தைமாத செவ்வாய் பொங்கல் என அனைத்து திருவிழாக்களும் நகரத்தார் மற்ற அனைத்து இனத்தவர்கள் ஒற்றுமையுடன் சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர். அதேவண்ணம் பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தமிழ்நாட்டில் முதன்முறையாக, புத்தர்பிரானுக்கு “மனோமய புத்தர்” என்ற பெயரில் புத்தர் பீடம் எங்கள் இல்ல வளாகத்தில் அழகான தோற்றத்தில் அமைக்கப்பெற்று 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் தமிழ் முறைப்படி குடமுழுக்கும், தாய்லாந்திலிருந்து வந்திருந்த புத்தபிட்சுக்கள் மூலமாக கண்கள் திறக்கப்பட்டு அருளாசி வழங்கிக்கொண்டுள்ளார். “நாம் எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நம் எண்ணம் தூய்மையடையும்போதுதான் மகிழ்ச்சி நம்மை நிழலைப்போல விலகாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். என்பது புத்தரின் பொன்மொழி புத்தர் பீடத்தின் கருப்பொருள் அமைதி. அந்த அமைதியின் வடிவமாக புத்தர் பிரானை பாருங்கள். புத்தரை கடவுளாக பார்க்க வேண்டாம். நீங்கள் எங்கு இருந்தால் அமைதி கிடைக்கும் என எண்ணுகிறீர்களோ அதற்கான வடிகாலே இந்த புத்தர் பீடம். இங்கு எந்த ஆகம விதிமுறைகளும் இல்லை.ஊதுபத்தி ஏற்றி வைத்து வழிபட்டால் போதும். எங்கள் தியான மையத்தின் மூலம் முதியவர்கள் அமைதியை அடைய உதவுவதும், எங்கள் நூலகத்தின் மூலம் பக்தர்களுக்கு ஆன்மீக அறிவை வழங்குவதும், எங்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஞானத்தை கற்பிப்பதும், எங்கள் உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானங்கள் மூலம் இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கம். அகக்கண்களை திறந்துக்கொண்டால் புறக்கண்கள் தானாக மூடி நம்மை அமைதிக்கு இட்டுச்செல்லும். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வதே வாழ்வு. புத்தர் பீடத்திற்கு வந்திருந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபடுங்கள், தாங்கள் எதிர்பார்த்த மன அமைதி கிட்டும்! இதற்காகத்தான் இத்துணை பிரயத்தனங்களும் செய்திருக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மணிகண்டன் சொக்கலிங்கம் செட்டியார் நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் பாகனேரி.
Scroll to Top